Our Feeds


Monday, December 21, 2020

www.shortnews.lk

கொரோனாவில் இன்று 05 பேர் மரணம் - மொத்த மரணம் 176 ஆக உயர்வு

 

இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.


இதற்கமைய இதுவரை நாட்டில் 176 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவரும், பனாகொட பிரசேத்தை சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 08 பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »