Our Feeds


Wednesday, December 16, 2020

www.shortnews.lk

சிறுபான்மையினரின் மத உரிமைக்கு மதிப்பளிக்க வலியுறுத்தி மன்னாரில் போராட்டம்!

 



(வாஸ் கூஞ்ஞ)

மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டு (மெசிடோ) நிறுவனத்தின் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வட கிழக்குப் பகுதிகளில் எட்டு மாவட்டங்களில் ஒரே நேரத்தில் இலங்கை அரசே ‘சிறுபான்மையினரின் மத உரிமைக்கு மதிப்பளிக்குக’ என்ற தொனிப்பொருளில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.


இதற்கமைய மெசிடோ நிறுவனத்தின் மன்னார் இணைப்பாளர் யட்சன் பிகிராடோ தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக  இன்று (16) நடைபெற்றது.

இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் இளம் சட்டத்தரணி கள் மற்றும் மன்னார் நகர சபை உப தவிசாளர் சூசை செபஸ்தியான் ஜான்ட்சன், நகர சபை உறுப்பினர் நிலாமூதீன் நவ்சீன் உட்பட பலர் கந்து கொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »