Our Feeds


Wednesday, December 16, 2020

www.shortnews.lk

ஜனாஸா எரிப்புக்கு எதிராக பூனகரி பிரதேச செயலகம் முன்னால் ஆர்பாட்டம்

 



இஸ்லாமியர்களின் ஜனாசாக்களை எரிக்காது அடக்கம் செய்யக் கோரி கிளிநொச்சி, பூநகரியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.


குறித்த போராட்டம் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இன்று காலை பூநகரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக நடத்தப்பட்டுள்ளது.


இந்த போராட்டத்தில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்களை சேர்ந்தவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டிருந்தனர்.


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »