இஸ்லாமிய கண்ணோட்டத்தில் இலஞ்சம், ஊழல், மோசடி என்பன மிகவும் பாவமான காரியமாகும்.
இலஞ்சம் கொடுத்து அதிகாரிகளிடம் செல்ல வேண்டாம் என இஸ்லாம் குறிப்பிடுகிறது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம். எஸ். எம். தாஸிம் விடுத்துள்ள காணொளி செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
வருடாந்தம் டிசம்பர் 9 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள விசேட செய்தியி லேயே அவர் இவ்வாறு குறிப் பிட்டுள்ளார். ஊழலை சமூகத் திலிருந்தும் நாட்டிலிருந்தும் அகற்றுவதற்கு நாம் மக்கள் மத் தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த
வேண்டும் நீ திருந்து உலகம் திருந்தும் எனச் சொல்வார்கள். எனவே ஒரு தனி மனிதன் இதிலிருந்து விடுபட்டால் சமூகம் அதிலிருந்து
விடுபடும். சமூகம் திருந்தினால் நாடே திருந்தும்
உங்களுடைய பொறுப்புக்கள் பற்றி நாளை மறுமையில் விசா ரணை செய்யப்படுவீர்கள் என அல்குர்ஆன் குறிப்பிடுகிறது
எனவே நாம் அனைவரும் இலஞ்சம், ஊழல், மோசடி என் பவற்றிலிருந்து விடுபடுவோம் என அந்த செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது
