Our Feeds


Saturday, December 19, 2020

www.shortnews.lk

இறக்காமம் பள்ளிவாசல் மீது மர்ம நபர்கள் தாக்குதல்...! - PHOTO இணைப்பு

 


இறக்காமம் - மஜித்புறம் பள்ளிவாசல் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.


இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.


மூன்று இனம் தெரியாத மர்ம நபர்களே இவ்வாறு பள்ளிவாசலினுள் உட் புகுந்து அதனுடைய கதவு மற்றும் கண்ணாடி போன்றவற்றினை நாசம் செய்துள்ளதாக அயலவர்கள் கருத்து தெரிவித்தனர்.


கடை உரிமையாளர் ஒருவர் இச்சம்பவத்தினை பார்வையிட்டுள்ளார். பின்னர் அவர் அவர்களை தடுக்க முற்படும் போது அந்த மர்ம நபர்கள் அவரை அச்சுறுத்தி இக்கொடூர செயலினை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.


இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.


செய்தியாளர் - ஹாசிம் சஜித் - இறக்காமம்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »