Our Feeds


Wednesday, December 16, 2020

www.shortnews.lk

VIDEO: மாலைதீவில் ஜனாஸா அடக்கலாம் என்றால் மனித நடமாட்டம் இல்லாத இலங்கை தீவொன்றில் அடக்க முடியாதா? - மனுஷ நாணயக்கார MP

 



மாலை தீவில் கொரோனா உடல்களை அடக்க முடியுமென்றால் மனித நடமாட்டம் இல்லாத இலங்கையின் தீவுகளில் ஒன்றில் ஏன் முஸ்லிம்களின் கொரோனா உடல்களை அடக்கம் செய்வதற்கு அரசுக்கு முடியாதுள்ளது என எதிர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார MP தெரிவித்துள்ளார்.


உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டல்களின் படி கொரோனா தொற்றிய உடல்களை எரிக்கவும், அடக்கவும் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


ஆனால் இலங்கையில் மாத்திரம் விசேடமாக கொரோனாவில் உயிரிழந்தவர்களை அடக்க முடியாது எரிக்கத்தான் வேண்டும் என அறிவித்துள்ளார்கள். உலகில் வேறு எந்த நாட்டிலும் இப்படியொரு நிலையில்லை. 


சிங்கள பெரும்பான்மை அரசை வைத்திருக்கிறோம் எனக் கூறி இனவாத குழுவொன்றின் தேவையை நிறைவேற்றவே முஸ்லிம்களை கஷ்டப்படுத்தி இந்த முடிவை அரசாங்கம் எடுத்துள்ளதாக பேசப்படுகின்றது. என எதிர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நானயக்கார இன்று (16) தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »