பொல்கஹவெல, பந்தாவையை சேர்ந்த சித்தி பசீரா என்ற 62 வயது பெண்மணி கொரோனாவில் மரணித்ததாக கூறி நேற்றைய தினம் அவருடைய உடல் எரிக்கப்பட்டுள்ளது. 03 பிள்ளைகள் தாயான குறித்த சகோதரியின் ஜனாஸாவை பிள்ளைகளுக்கு கூட பார்க்க அனுமதிக்காமல் எரியூட்டியதுடன், இறுதிக் கடமையான ஜனாஸா தொழுகைக்கு கூட உறவினர்களுக்கு அனுமதி வழங்க வில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
கொரோனாவில் மரணிக்கும் இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்குவதா? எரிப்பதா? என்ற இறுதி தீர்மானத்தை எடுக்கும் வரை உடல்களை எரிக்க வேண்டாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகள் சங்கத்திற்கு அறிவுறுத்தியிருந்தும் பிரதமரின் அறிவுறுத்தல்களுக்கு மாற்றமாக அவசர அவசரமாக குறித்த சகோதரியின் ஜனாஸாவை எரித்துள்ளமை பிரதேச முஸ்லிம்கள் மத்தியிலும் இலங்கை முஸ்லிம்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
