Our Feeds


Wednesday, February 17, 2021

www.shortnews.lk

கண்டி, பேராதனை பகுதியில் 04 மாத குழந்தை கொரோனா தொற்றில் உயிரிழப்பு

 



கண்டி − பேராதனை பகுதியில் 4 மாத குழந்தையொன்று கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.


உயிரிழந்த குழந்தைக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில், குழந்தைக்கு கொவிட் தொற்றிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கண்டி − நுகவெல பகுதியைச் சேர்ந்த குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »