Our Feeds


Wednesday, February 17, 2021

www.shortnews.lk

“இராணுவ வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள மாட்டோம்” : தமிழ் MPக்கள் சிலர் தீர்மானம்

 



இராணுவ வைத்தியசாலையில் கொவிட் தடுப்பூசியை தமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ள போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவிக்கின்றது.


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் S.கஜேந்திரன் இதனை தெரிவித்தார்.

இன அழிப்பை நடத்திய இராணுவத்தின் செயற்பாட்டை தாம் ஏற்றுக்கொள்ள போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் எண்ணம் தனக்கு உள்ள போதிலும், இராணுவத்திடமிருந்து அதனை பெற்றுக்கொள்வதற்கான எண்ணம் கிடையாது எனவும் S.கஜேந்திரன் கூறினார்.

இதேவேளை, இராணுவ வைத்தியசாலைக்கு சென்று கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஶ்ரீதரன் தெரிவிக்கின்றார்.

இராணுவ வைத்தியசாலைக்கு சென்று, தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பில் தனக்கு நம்பிக்கை கிடையாது எனவும் அவர் கூறினார்.

அரசாங்க வைத்தியசாலைகள் காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில், ஏன் இராணுவ வைத்தியசாலைகளில் இந்த தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்புகின்றார்.

கிளிநொச்சியில் தடுப்பூசி வழங்கப்படும் சந்தர்ப்பத்தில், மக்களோடு மக்களாக தானும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தயார் என எஸ்.ஶ்ரீதரன் தெரிவித்தார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »