(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தன்னை விடுவிக்குமாறு தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை (எழுத்தாணை மனு) எதிர்வரும் 24 ஆம் திகதி பரிசீலிக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) தீர்மானித்தது.
பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
