Our Feeds


Thursday, February 18, 2021

www.shortnews.lk

600 வாள்கள் இறக்குமதி - கர்தினால் மல்கம் ரஞ்சித் தாக்கல் செய்த வழக்கு விசாரனைக்கு நாள் நிர்ணயம்.

 



ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் 6 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைக்கான திகதியிடப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பில், உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு தரப்பிற்கு உத்தரவிட கோரி பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மனுவொன்றினை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தவிசாளர் அர்ஜூன ஒபேசேகர மற்றும் மாயாதுன்ன கொராயா ஆகியோர் முன்னிலையில் ஆராயப்பட்டது.

இதன்போது, அந்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதியரசர்கள் திகதியிட்டுள்ளனர்.

அன்றைய தினம் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் நிலவரம் தொடர்பிலான தெளிப்படுத்தல்களை மேற்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், காவல்துறை மா அதிபர் சீ.டி விக்ரமரட்ன உள்ளிட்ட பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள பாதுகாப்பு தரப்பு பிரதானிகளுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »