Our Feeds


Wednesday, February 24, 2021

www.shortnews.lk

அதிகாரிகளை அழைத்து சென்று பிரதேச சபை எல்லைக்குள் அபிவிருத்தி செய்ய வேண்டிய இடங்களை பார்வையிட்டு உடனடி தீர்வு.

 

பொதுமக்களது வேண்டுகோளுக்கும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கும் ஏற்ப அக்குறணை பிரதேச எல்லைக்குள் அபிவிருத்தி செய்யப்படவேண்டிய மற்றும் புனரமைக்கப்படவேண்டிய பாதை வேலைகள், பாதுகாப்புக்கான தடுப்புச்சுவர் அமைப்பு, நகரிலிருந்து தூரப்பட்ட இடங்களிலுள்ள மக்களது அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்தல் போன்ற பல்வேறு தேவைகளை நிவர்த்தி செய்வதற்கென நேற்றைய தினம் அக்குறணை பிரதேச சபைத் தவிசாளருடன்,  சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் ஊரார்களும் இணைந்து பல இடங்களில்  களப்பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டன.


அத்துடன் அத்தியாவசியத்தின் அடிப்படையில் குறித்த தேவைகளை நிறைவேற்றும் அபிவிருத்திப் பணிகளை கூடிய விரைவில் ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகளை இயன்றளவு மேற்கொள்வதாக அவ்வேளையில் தவிசாளர் அவர்கள் தெரிவித்தார்.








Subscribe to this Blog via Email :
Previous
Next Post »