Our Feeds


Wednesday, February 24, 2021

www.shortnews.lk

முஸ்லிம் MP க்களுக்கு இறுதி நேரத்தில் திடீரென வந்த அழைப்பு - இம்ரான்கானின் பாதுகாப்புக்கு முன்னுரிமையே காரணம்

 



இம்ரான் கான், முஸ்லிம் எம்பிகளின் சந்திப்பு பாதுகாப்பு நலன்கருதி வெளிப்படுத்தப்படாத நிகழ்ச்சி நிரல்.


இலங்கை நாட்டுக்கு 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதமர் இம்ரான் கான் இன்று (24) ஆம் திகதி இலங்கை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார். இன்று மாலை 2.00 மணிக்கு சந்திப்பதற்கு ஏற்கனவே பாகிஸ்தான் பிரதமரின் நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு மற்றும் இதர காரணங்களுக்கவும் வெளிப்படுத்தப்படவில்லை என அங்கு இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானியர் அலுவலக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 


குறித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று காலையே திடிரென பாகிஸ்தான் உயர்ஸ்தானியர் அலுவகம் தொலைபேசி ஊடாக அனைத்து அழைப்பு விடுத்துள்ளது. 


ஆகவே, குறித்த சந்திப்பு தொடர்பில் சமூக ஊடகங்களில் சில அரசியல்வாதிகளின் தனிப்பட்ட ரீதியில் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக  வெளிவந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லையென தெரியவருகின்றது.  மக்கள் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி தலைவர்கள், இம்ரான் காலை சந்திப்பதற்கு நேரம் கோரியிருந்தாலும் அதற்கான சாதக பதில் ஆரம்பத்தில் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இந்தப் பேச்சின் போது, இலங்கை முஸ்லிம்களின் விவகாரம், ஜனாஸா எரிப்பு விவகாரம் தொடரில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துரைத்தனர். இதற்கு பதிலளித்த இம்ரான் கான் ”ஜனாஸா விவகாரம் குறித்து தான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும் கதைத்தேன் அவர்களிடமிருந்து சாதக பதில் கிடைத்துள்ளது. எனினும் இவ்விவகாரங்களை விலாவாரியாக, நாம் ஊடகங்களில் பகிரங்கப்படுத்த தேவையில்லை” என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சுட்டிக்காட்டியுள்ளார்.


இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், அலி சப்ரி, முஷாரப் , முஜூபுர் ரஹ்மான், ஹலீம், இஷாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம், ஹரீஸ், பைஷல் காசீம், தெளபீக், ஹாபீஸ் நசீர் மற்றும் இம்ரான் மஹ்ரூப்  உள்ளிட்டோர் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். 


மேலும்,  எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரமதாஸவுக்கு இம்ரான் கானுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றதுள்ளது. அதன் போது நாட்டின் முஸ்லிம் மக்களின் நெருக்குவாரங்கள் தொடபிலும் எடுத்துரைக்கப்பட்டதுடன் அங்கு பாராளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாகிர் மரைக்கார்  மற்றும் கபீர் காசீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »