பெப்ரவரி 08ம் திகதி முதல் எமது நாட்டின் முதல் கட்டமாக சுகாதார நிலை ஊழியர்களுக்கும், போலீஸ், இராணுவ பிரிவினருடன் சம்பந்தப்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் எந்தவொரு திட்டமும் இல்லாமல் இது நடைபெறுகின்றதாக தகவல்கள் கிடைக்கின்றது, இதிலே மருத்துவ பீட மாணவர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் ஏனென்றால் வைரஸ் பாதிப்புக்குள்ளாகும் அதிக ஆபத்தில் இருக்கும் நோயாளிகளுடன் மருத்துவ பீட மாணவர்கள் நேரடியாக தொடர்பு கொள்கிறார்கள். விடுதி உட்பட, அவர்கள் படிக்கின்ற சூழலில் வைரஸ் வேகமாக பரவுவதற்கான சாத்தியமும் உள்ளது எனவே அரசாங்கம் இதனை கவனத்தில் எடுக்க வேண்டும்.
இலங்கையில் ஒரு பொறுப்பான அரசாங்கம் இருக்குமென்றால் முதலில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி கொடுப்பதற்கு முன்பு கிடைக்கப்பெற்றுள்ள ஒரு குறிப்பிட்ட தொகை தடுப்பூசியை இந்த கோவிட் 19 உடன் நேரடியாக தொடர்பு கொண்டு அதனுடன் போராடக்கூடிய வர்களுக்கே வழங்கப்பட வேண்டும். இதனைத்தான் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் வலியுறுத்திவருகின்றது.
எனவே, கொரோனா தடுப்பூசி இப்போது விஞ்ஞான மற்றும் வெளிப்படையான அடிப்படையில் தேவையானவர்களுக்கு மாத்திரம் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு நாம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம். ஒவ்வொரு தடுப்பூசிக்கும் சுகாதார அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும், மேலும் ஒவ்வொரு தடுப்பூசியும் எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது என்பதை விளக்கமாக நாட்டுக்கு அறிவிக்கவும் வேண்டும்.
ஹிதாயத் சத்தார்
முன்னாள் உறுப்பினர், மத்திய மாகாண சபை
