Our Feeds


Monday, February 22, 2021

www.shortnews.lk

PHOTOS: நானு ஓயாவில் பவுசரில் மோதி இழுத்து செல்லப்பட்ட பஸ் - 13 பேர் காயம்

 



(க.கிஷாந்தன்)


நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இடம் பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று (22) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


மொனராகலை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு மரண வீடு ஒன்றுக்காக சென்று கொண்டிருந்த குறித்த பஸ் ரதல்ல குறுக்கு வீதியில் வைத்து பவுஸர் ஒன்றுடன் மோதி இழுத்துச் செல்லப்பட்டு மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.


இந்த பஸ்ஸில் 18 பேர் பயணித்துள்ளதுடன் இவர்களில் 13 பேர் பலத்த காயங்களுடன் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பஸ்ஸின் தடுப்பு கட்டையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்விபத்து இடம்பெற்றதாக பஸ்ஸில் பயணித்த ஒருவர் தெரிவித்தார்.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







Subscribe to this Blog via Email :
Previous
Next Post »