Our Feeds


Sunday, March 28, 2021

www.shortnews.lk

குருத்தோலை ஞாயிறு தினமான இன்று இந்தோனேஷியாவில் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் - 14 பேர் காயம்.

 



இந்தோனேஷியாவில் கிறிஸ்தவ தேவாலயமொன்றில் இன்று தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


சுலாவெஸி தீவின் மகாஸ்ஸர் நகரிலுள்ள தேவாலயமொன்றில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது என பொலிஸார் தெரிவத்துள்ளனர்.

இச்சம்பவத்தில் குறைந்தபட்சம் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

கிறிஸ்தவர்கள் இன்று குருத்தோலை ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கும் நிலையில் இந்த தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேவாலயத்தின் முன் வாயில் அருகில் இரு நபர்கள் மோட்டார் சைக்களில் வந்தனர் என பொலிஸ் பேச்சாளர் ஆர்கோ யுவோனோ கூறியுள்ளார்.

தாக்குதலாளிகள் இருவரும் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார தெரிவித்துள்ளனர்.

தாக்குதலாளிகளில் ஒருவரை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் மறித்தார் என தேவாலயத்தின் அருட் தந்தை வில்ஹேமுஸ் துலாக் தெரிவித்துள்ளார்.

மேற்படி தாக்குதலாளி, தேவாலயத்தில் நுழைய முயன்றார் எனவும் அவர் கூறியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »