கடந்த 24 மணித்தியாலங்களில் வாகன விபத்துக்களினால் 11 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.
கெகிராவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன், 13 பேர் காயமடைந்ததாகவும் அவர் கூறுகின்றார்.
சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையே விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
மதுபோதையில் வாகனம் செலுத்துதல், அதிக வேகத்தில் வாகத்தை செலுத்துதல், வீதி சட்டங்களை மீறி வாகனங்களை செலுத்துதல் விபத்துக்கு காரணம் என அவர் குறிப்பிடுகின்றார்.
