Our Feeds


Thursday, March 25, 2021

www.shortnews.lk

மனித நேய மனிதன் - பசரை விபத்தில் பெற்றோரை இழந்த 3 பிள்ளைகளையும் தத்தெடுக்க முன்வந்த மருத்துவர்

 



பசறை விபத்தில் தாய் தந்தையை இழந்து அநாதைகளான மூன்று குழந்தைகளுக்கும் உதவுவதற்கு வைத்தியர் ஒருவர் முன்வந்துள்ளார்.


பதுளை – பசறையில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்திருந்தனர்.

இதில் மூன்று குழந்தைகள் தமது தாய் தந்தையை இழந்தது லுனுகலையில் பாட்டியுடன் வாழ்கின்றமை அனைத்து ஊடகங்களினதும் கவனத்தை ஈர்த்திருந்தது.

இதையடுத்து குறித்த குழந்தைகளுக்கு உதவ அம்பாறை பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் வஜிர ராஜபக்ஷ முன்வந்துள்ளார்.

மூன்று குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறி அவர்களை தத்தெடுக்க பசறை பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி, டாக்டர் வஜிர ராஜபக்ஷவின் கோரிக்கை குறித்து பசறை பொலிஸார் நீதிமன்றத்திற்கு தகவல் அளித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »