பெரும்அளவிலான அஸ்ட்ராஸெனிக்கா தடுப்பூசி ஏற்றுமதிகளை இந்தியா இடைநிறுத்தியுள்ளது. உள்ளூர் தேவையை பூர்த்தி செய்வதற்காக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஸெனிக்கா நிறுவனம் இணைந்து தயாரித்த இத்தடுப்பூசியை இந்தியாவின் சீரம் நிறுவனம் கோவிஷீல்ட் என்ற பெயரில் தயாரித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கொவிட்-19 தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக, தடுப்பூசிக்கு ஏற்பட்டுள்ள தேவையை பூர்த்தி செய்வதற்காக பாரிய அளவிலான தடுப்பூசி ஏற்றுமதியை ஏப்ரல் இறுதிவரை இந்தியா இடைநிறுத்தியுள்ளது.
இத்தீர்மானது உலக சுகாதார ஸ்தாபனத்தின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழான, குறைந்த வருமானமுடைய 64 நாடுகளுக்கு தடுப்பூசி விநியோகிக்கும் திட்டத்தையும் பாதிக்கும் என யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
