Our Feeds


Monday, March 29, 2021

www.shortnews.lk

Breaking News – தேங்காய் எண்ணெய்யில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் அடங்கியுள்ளமை சற்றுமுன் உறுதியானது!

 



பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய எப்லடொக்சின் காசினோஜென் என்ற இரசாயனம் அடங்கியுள்ளமை உறுதியாகி உள்ளது.


இலங்கை தரச்சான்றுகள் நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் இதை உறுதிப்படுத்தியதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து தேங்காய் எண்ணெய் மாதிரிகளும் தரமற்றவை என உறுதியாகி உள்ளது.

மேலும் அவற்றை முழுமையாக நிராகரிப்பதாகவும் இலங்கை தரச்சான்று நிறுவகம் தெரிவித்துள்ளது.

எனவே, தரச்சான்று நிறுவகத்தின் பரிசோதனைகள் நிறைவடையும் வரையில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் வசமிருந்த தேங்காய் எண்ணெய்யை மீள் ஏற்றுமதி செய்யவும் உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »