மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பிலான சட்டத்தை திருத்துகின்றமை குறித்த இறுதித் தீர்மானம், இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை சந்திப்பில் எட்டப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.
இதன்படி, எந்த நடைமுறையின் கீழாவது மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாகாண சபை உறுப்பினர்களின் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றது.
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுகின்றமை குறித்து இரண்டு யோசனைகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன், அமைச்சரவைக்கு கடந்த வாரம் முன்வைத்துள்ளார்.
