யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் YouTube சேனல் மற்றும் வலைத்தளத்தை நடத்தியமைக்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – நாவலர் வீதியில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 35 வயது பெண் ஒருவரும் 36 வயது ஆண் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
