நேற்றைய தினம் இதுவரையில் 3,441 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 154,784 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,165 பேர் இன்று (20) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 123,532 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இவர்களில் 1,051 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
