Our Feeds


Friday, May 21, 2021

www.shortnews.lk

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி 24 மணி நேரத்தில் 414 பேர் கைது - 11 ஆயிரத்தை தாண்டியது மொத்த கைது.

 



கடந்த 24 மணித்தியாலயத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 414 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அதன் அடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரையில் 11,320 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »