நாடு முழுவதும் இன்று முதல் முடக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் (21) 11 மணி முதல் எதிர்வரும் 25ம் திகதி அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
அத்துடன், எதிர்வரும் 25ம் திகதி இரவு 11 மணி முதல் எதிர்வரும் 28ம் திகதி அதிகாலை 4 மணி வரை மீண்டும் பயணத் தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவம் குறிப்பிடுகின்றது.
எதிர்வரும் 25ம் திகதி அதிகாலை 4 மணி முதல் அன்றைய தினம் இரவு 11 மணி வரை மக்களுக்கு நிவாரண காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
