குறித்த குற்றச்சாட்டுக்காக ஒரே நாளில் அதிகளவான கைதுகள் இடம்பெற்றுள்ளமை இது முதல் சந்தர்ப்பமாகும்.
நேற்று இடம்பெற்ற கைதுகளில் அதிகளவானவை மத்தளையில் இடம்பெற்றுள்ளது. அங்கு 180 பேரும், நிகவரெட்டியவில் 79 பேரும், கொழும்பில் 72 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 15,595 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை மேல் மாகாணத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது அத்தியாவசிய தேவையின்றி பயணித்த 66 வாகனங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
பயணக் கட்டுப்பாடுகளை மீறிய குற்றச்சாட்டில் இதன்போது வாகன சாரதிகளும் கைது செய்யப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், கார்கள், வேன்கள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், கொள்கலன்கள் மற்றும் பிற வாகனங்கள் உள்ளிட்ட 700 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டதாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன கூறினார்.
அத்தியாவசிய சேவைகளின் ஒரு பகுதியான வாகனங்கள் மற்றும் நோயாளிகளைக் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே இந்த காலகட்டத்தில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ட்ரோன் கமராக்களின் உதவியுடன் பொரளையில் நேற்று ஒரு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, இதன்போது தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறியமைக்காக ஐவர் அடையாளம் காணப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
