கிழக்கு – மத்தியவங்காள விரிகுடா கடற்பரப்புகளில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இது தொடர்ந்து வரும் 24 மணித்தியாலங்களில் பாரிய சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மே 26ஆம் திகதியளவில் மேற்கு வங்காள கரையை அடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கிழக்கு – மத்தியவங்காள விரிகுடாவிலும் அண்மையாகவுள்ளகடற்பரப்புகளில் (08N – 20N, 83N – 100N) மே 22ஆம் திகதியிலிருந்தும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மே 23ஆம் திகதியிலிருந்தும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
