Our Feeds


Saturday, May 29, 2021

SHAHNI RAMEES

மட்டக்களப்பில் 2 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்கள்

 


    மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் மூன்றாவது அலை காரணமாக 1,199 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், 08 கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.


நேற்று இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளைத் தனிமைப்படுத்தல் இருந்து விடுவிப்பதற்கான சிபார்சினை தேசிய கொவிட் செயலணிக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கொவிட் தடுப்பு செயலணியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மாவட்ட அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்கள், பயணக் கட்டுப்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடிப்பதன் மூலமே இந்த தொற்றினை கட்டுப்படுத்த முடியும் எனவும் இதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் எனவும் அரசாங்க அதிபர் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்குப் பத்தாயிரம் மற்றும் ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

( அரசாங்க தகவல் திணைக்களம்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »