Our Feeds


Saturday, May 15, 2021

www.shortnews.lk

முடக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு 5000ம் ரூபா பெருமதியான நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடு

 



நாட்டில் தற்போது பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வைரஸ் தொற்று வேகமாக பரவுவதாக அடையாளம் காணப்பட்டு தற்போது முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 5000 ரூபா பெறுமதியான நிவாரணப் பொதிகள் வழங்கப்படவுள்ளன.


வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைவாக 20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய இந்த பொதிகள் சதோச ஊடாக விநியோகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஊடாக தெரிவு செய்யப்படும் குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாட்டை விதிக்க அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறையை ஏற்படுத்துவது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »