Our Feeds


Sunday, May 16, 2021

www.shortnews.lk

இஸ்ரேலில் இருக்கும் சுமார் 5000ம் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்.

 



இஸ்ரேல்-காஸா இடையில் இடம்பெற்றுவரும் போர் உச்ச நிலையை அடைந்துள்ளதன் காரணமாக, அங்குள்ள இலங்கையர்களுக்கு இலங்கை அரசாங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கின்றது.


சுமார் 5000 இலங்கையர்கள் இஸ்ரேலில் தொழில்புரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழலுக்கு மத்தியில் டெல் அவிவ் நகரிலுள்ள இலங்கைத் தூதரகம் அங்குள்ள இலங்கை மக்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, மக்கள் ஒன்றுகூடுகின்ற இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும், அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் இலங்கை தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் மிகவும் அவதானமாக செயற்படும்படியும் இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »