Our Feeds


Friday, May 28, 2021

www.shortnews.lk

நீர், மின்சாரக் கட்டண சலுகைகள் இல்லை - 5000ம் கிடைக்கும் - அமைச்சர் வாசுதேவ

 



(ஆர்.யசி)


நாளாந்த கூலித் தொழிலாளர்கள், அரச ஊழியர்கள் அல்லாதோர் மற்றும் வருமானம் இல்லாத குடும்பத்தினருக்கு அடுத்த வாரம் தொடக்கம் 5,000 ரூபா நிவாரணத் தொகையை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். எனினும் நீர்,மின் கட்டண சலுகைகள் வழங்கப்படாது எனவும் அவர் கூறினார்.


கொவிட் -19 வைரஸ் பரவல் காரணமாக மக்களின் நாளாந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் மக்களுக்காக முன்னெடுக்கும் வேலைத்திட்டம் குறித்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறினார்.அவர் மேலும் கூறுகையில்,


மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேவேளை, நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இந்தச் சவால்களுக்கு மத்தியில் கொவிட் -19 வைரஸ் பரவலையும் கட்டுப்படுத்தியாக வேண்டும். அதற்கான நடவடிக்கைகளையே அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.


மேலும் அடுத்த மாதத்துக்கான நெருக்கடி நிலைகளில் இருந்து மக்கள் ஓரளவு தம்மை மீட்டுக்கொள்ள 5,000 ரூபா உதவியாக அமையும் என கருதுகின்றோம். எனினும் நீர் கட்டணம், மின் கட்டணம் என்பவற்றில் சலுகைகள் வழங்குவது குறித்து தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »