இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1178 ஆக அதிகரித்துள்ளது.
இறுதியாக 46 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இந்த உயிரிழப்புக்கள் மே மாதம் 16ம் திகதி முதல் நேற்றைய தினம்,வரை பதிவாகியவை என அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழப்புக்கள் இடம்பெற்ற திகதிகள்
மே 16 :− 04
மே 17 :− 04
மே 18 :− 03
மே 19 :− 08
மே 20 :− 15
மே 21 :− 10
மே 22 :− 02
இதன்படி, நேற்றைய தினம் வெளியிடப்பட்ட அறிக்கையில் மொத்தமாக 46 கொவிட் உயிரிழப்புக்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
