Our Feeds


Sunday, May 23, 2021

www.shortnews.lk

ஒரு லட்சத்து 63 ஆயிரத்தை தாண்டியது இலங்கையின் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை

 



இலங்கையில் மேலும் 2,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 163,496 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,612 பேர் இன்று (23) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 128,607 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இவர்களில் 1,178 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »