Our Feeds


Friday, May 28, 2021

www.shortnews.lk

ஜுன் 7 வரை பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட மாட்டாது - ஜனாதிபதியுடனான விசேட கலந்துரையாடலில் மீண்டும் தீர்மானம்.

 



தற்போது அமுலில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதிவரை தொடர்ந்தும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


கொவிட் பரவல் தடுப்பு தேசிய செயலணி தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் கொவிட் தடுப்பு தேசிய செயலணி உறுப்பினர்களும் இடையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய, எதிர்வரும் மே 31 மற்றும் ஜூன் 4 ஆம்திகதிகளில் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படாமல், தொடர்ந்தும் ஜூன் 7 ஆம் திகதிவரை நீடிக்கும் என ,ராணுவ தளபதி தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »