மே 31 ஆம் திகதிக்கு முன் சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையெனில் 01 ஆம் திகதி நண்பகல் 12.00 முதல் 1.00 மணிவரை அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது.
எனவே, தங்களது மருத்துவமனைகளில் இந்த கோரிக்கைகளை வென்றெடுக்க அனைத்து தாதியர்களையும் ஒன்றிணைத்து தயார்படுத்துமாறு குறித்த சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
அந்த வகையில் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தினால் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
1. தாதிய உத்தியோகத்தர்களின் குடும்பத்தினருக்கும் ஏனைய சுகாதாரத் துறையினரின் குடும்பத்தினருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துதல்.
2. அனைத்து தாதியருக்கும் 5,000 ரூபா இடர் கொடுப்பனவு வழங்குதல்.
3. புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட 4,000 தாதிய உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துதல்.
4. கர்ப்பிணித் தாதிய உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்கல்.
5. கொரோனா பரிசோதனை பிரிவில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு போதிய வளங்களை வழங்குதல்.
6. பயணத்தடை காலத்தில் தாதிய உத்தியோகத்தர்கள் கடமைக்கு வருகைத் தருவதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
7. கொரோனா சிகிச்சை மையங்களிலும் ஏனைய சுகாதாரசார் நிறுவனங்களிலும் கடைமை புரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கு N 95 முகக் கவசம் மற்றும் உரிய பாதுகாப்பு உடைகள் வழங்குதல்.
