கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற கொரோனா நோயாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த கடந்த 25 ஆம் திகதி தப்பிச்சென்றிருந்த குறித்த கொரோனா நோயாளர் தமன பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைவாக அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
