(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)
அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென்பதற்காக கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்கும் தீர்மானத்தை எமது கட்சி எடுத்தது.
மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வடக்கு, கிழக்கிலேயே கொள்கை அரசியல் செய்யலாம். எங்களால் அதனைச் செய்ய முடியாது.
இவ்வாறு தெரிவிக்கிறார் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்) அலி சப்ரி ரஹீம்.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆகியோர் ஆதரவாக வாக்களித்த காரணத்தினால் அவர்கள் கட்சியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம். இது தொடர்பில் தனியார் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய குரல்வழி செவ்வியிலேயே அலி சப்ரி ரஹீம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
