Our Feeds


Thursday, May 27, 2021

www.shortnews.lk

கப்பலில் இருந்து கரையொதுங்கிய பொருட்களை தொட்ட சிலருக்கு ஏற்பட்டுள்ள உடலியல் பிரச்சினை

 



தீப்பற்றிய எக்ஸ்-பிரஸ் பேர்ல் (X-Press Pearl) கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்து கரையொதுங்கிய பொருட்களை தொட்ட சில நபர்கள், வெவ்வேறு ஒவ்வாமைகளுக்கு ஆளாகி உள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.


தீப்பற்றியுள்ள எக்ஸ்-பிரெஸ் பேர்ல் கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்து கரையொதுங்கிய இரசாயன மற்றும் ஏனைய பொருட்கள் வத்தளை – ப்ரீதிபுர முதல் நீர்கொழும்பு வரையான கடற்கரையில் கரையொதுங்கின.

இவ்வாறு கரையொதுங்கிய பொருட்களை பொதுமக்கள் தொடவோ, சேகரிக்கவோ வேண்டாம் என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்திருந்தது. எவ்வாறாயினும் குறித்த அறிவுறுத்தல்களை மீறி சிலர் குறித்த பொருட்களை சேகரித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொழும்பு துறைமுகத்திற்கு வடமேல் திசையில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில், தீப்பற்றிய எஎக்ஸ்-பிரஸ் பேர்ல் (X-Press Pearl) கப்பலில் தொடர்ந்தும் தீ பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »