நாட்டின் பல பகுதிகளில்
இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு
கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் இடைக்கிடையே
மழையுடனான வானிலை நிலவக்கூடும்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் இரவு
வேளையில் மழை பெய்யக் கூடும்.
சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
நாட்டின் சில பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில்
காற்று வீசக்கூடும்.
வடக்கு, வடமத்திய மற்றும்
வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில்
பலத்த காற்று வீசக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழைபெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின்
வேகம் அதிகரித்து காணப்படுவதோடு மின்னல் தாக்கத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள்
தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம்
அறிவுறுத்தியுள்ளது.
