Our Feeds


Sunday, May 16, 2021

www.shortnews.lk

கொவிட் அறிகுறி இருக்கின்றதா? – தடுப்பூசி பெற்றுக்கொள்ள முடியுமா? – விசேட வைத்தியரின் பதில்

 



கொவிட் – 19 வைரஸ் நோய் அறிகுறிகள் காணப்படும் நபர்கள், கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டாம் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கின்றது.


கொவிட் நோய் அறிகுறிகள் காணப்படும் நபர்கள், தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் பட்சத்தில், அது உரிய பெறுபேறுகளை தராது என அந்த பிரிவின் பிரதானி, விசேட வைத்தியர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவிக்கின்றார்.


கொழும்பில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


கொவிட் நோய் அறிகுறிகள் காணப்படுமாக இருந்தால், அவர்கள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதன் ஊடாக உரிய பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியாது என அவர் கூறுகின்றார்.


ஏனெனில், உடலில் கொரோனா வைரஸ் ஏற்கனவே இருக்கின்றமையினால், தடுப்பூசி உரிய பெறுபேறுகளை வழங்காது என அவர் தெரிவிக்கின்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »