Our Feeds


Wednesday, May 19, 2021

www.shortnews.lk

இயற்கையையும் சுற்றாடலையும் நாம் நேசிக்கிறோம். எமது சமூகத்தில் எவருக்கு கொரோனா இல்லை - ஆதிவாசிகள் தலைவர்

 



(வத்துகாமம் நிருபர்)


ஆதிவாசிகள் சமூகத்திலிருந்து இதுவரையும் ஒரு கொரோனா நோயாளி கூட இனம் காணப்பட வில்லை என ஆதிவாசிகள் தலைவர் ஊருகே வன்னியலத்தோ தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், இயற்கையுடனான இயல்பு வாழ்கையும் சுற்றாடலை நேசிக்கும் சமநிலை வாழ்க்கையும் நாம் மேற்கொள்வதன் ஊடாக ​இயற்கையும், சுற்றாடலும் எம்மைப் பாதுகாக்கும் என்கிறார். இருப்பினும் பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்குவதைத் தான் எதிர்க்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.


நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையை கவனத்திற்கொண்டு, அரசியல், இன, மத, பிரதேச பேதங்களை மறந்து கொவிட்-19 அழிவில் இருந்து மக்களைப் பாதுகாக்க சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »