Our Feeds


Sunday, May 30, 2021

www.shortnews.lk

அக்கரைப்பற்றை சேர்ந்த Dr ரிகாஸ் UK யில் சிறுநீரக வைத்தியத்துறையில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.

 



 ஐ.எல்.எம்.றிஸான்


அக்கரைப்பற்றை பிறப்பிடமாகவும் தற்போது ஐக்கிய இராச்சியத்தை வசிப்பிடமாகவும் கொண்ட டாக்டர் றிக்காஸ் றஹீம், சிறுநீரக வைத்தியத்துறை (FRCS)  பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.


தற்போது பிரித்தானியாவைச் சேர்ந்த மில்டன் கீன்ஸ் பல்கலைக்கழக வைத்தியசாலையில் சிறுநீரகத்துறை விஷேட வைத்தியராகக் கடமையாற்றும் டாக்டர் றிக்காஸ் றஹீம், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை), கொழும்பு ரோயல் கல்லூரி என்பனவற்றின் பழைய மாணவரும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மருத்துவப் பட்டதாரியுமாவார்.

எடின்பேர்க் பல்கலைக்கழக MRCS, சிறுநீரக வைத்தியத்துறை முதுமாணி பட்டதாரிமான இவர் எடின்பேர்க் வைத்தியக் கல்லூரி OSCE பரீட்சையாளரும், போதனாசிரியருமாவார்.

எடின்பேர்க் பல்கலைக்கழக MSC சத்திரசிகிச்சை விஞ்ஞான பீட போதனாசிரியருமாவார். எடின்பேர்க் றோயல் கல்லூரி சத்திர சிகிச்சையாளர் குழுமத்தின் சிறுநீரக சத்திர சிகிச்சை விஷேட குழுவின் அங்கத்தவரான இவர், பிரித்தானிய சிறுநீரக சத்திரசிகிச்சை சங்கத்தின் செயற்குழு அங்கத்தவருமாவார்.

இவர் அக்கரைப்பற்று-02. றஹீம் - லியாக்கத்பேகம் ஆசிரிய தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வராவார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »