Our Feeds


Sunday, May 30, 2021

www.shortnews.lk

பலஸ்தீன் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்து வந்த பௌத்த தேரர் உயிரிழந்தார்

 



பலஸ்தீன மக்களுக்காக கடந்த பல தசாப்தங்களாக இலங்கையில் குரல்கொடுத்து வந்த பத்தேகம சமித தேரர், நேற்று (29) சனிக்கிழமை காலமானார்.


கொவிட் - 19 காரணமாக மாத்தறையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் காலமானார்.

1952ஆம் ஆண்டு பிறந்த இவர், 2001 – 2004ஆம் ஆண்டு காலப் பகுதியில் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டுள்ளார். பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படட முதலாவது பௌத்த தேரர் என்ற பெருமையும் இவரையே சாரும்.

தென் மாகாண சபை உறுப்பினராக மிக நீண்ட காலம் இவர் செயற்பட்டுள்ளார். பலஸ்தீன மக்களுக்காக கடந்த பல தசாப்த காலமாக குரல்கொடுத்து வரும் இவர், பலஸ்தீன் ஒருமைப்பாட்டு அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினராவார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »