கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு நாளைய தினம் (22) வெளிவரவுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படுமாக இருந்தால், முன்கூட்டியே அது குறித்து அறிவிக்கப்படும் என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவிக்கின்றார்.
