Our Feeds


Tuesday, May 18, 2021

www.shortnews.lk

VIDEO: பலஸ்தீன முஸ்லிம்கள் மீது இனப்படுகொலை நடத்தப்படுகிறது - அதனை உடனே நிறுத்துங்கள் - பாராளுமன்றில் எதிர் கட்சி தலைவர் கோரிக்கை

 



தற்போது காஸாவில் நடைபெற்று வரும் இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக பலஸ்தீன மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது உண்மையில் ஒரு மனித இனப்படுகொலையாகும். என இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


மத்திய கிழக்கில் பலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் நிலைக்கு இரட்டை ராஜ்ய தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.


பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீன முஸ்லிம்கள் சார்பில் நாம் குரல் எழுப்புவோம் என்பதுடன் ஹிட்லரின் ஆட்சியில் யூதர்களுக்கு எதிராக நடந்த தாக்குதல் போன்றே இப்போது நடைபெறுகிறது என்பதை நாம் நினைவூட்ட விரும்புகிறோம். 


அதே வேலை, நான் பேசிக் கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரை 200 க்கும் அதிகமான பாலஸ்தீன முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எனவே பலஸ்தீன் முஸ்லிம்கள் மீதான இந்த கொடூர தாக்குதலை எதிர் கட்சி சார்பில் நாம் கடுமையாக கண்டிக்கிறோம்.


பலஸ்தீனர்கள் மீதான இந்தத் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »