Our Feeds


Friday, May 28, 2021

www.shortnews.lk

VIDEO: வைத்தியசாலையிலிருந்து இரு தடவைகள் தப்பியோடிய கொரோ நோயாளி மரணம்!

 



ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இரு தடவைகள் தப்பிச்சென்ற கொவிட் தொற்றாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம வைத்தியசாலை காவல்துறையினர் தெரிவித்தனர்.


கொவிட் தொற்றினால் உயிரிழந்த இந்நபரின் உடல் மீகொட, முதுஹேனவத்த பொதுமயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

ராகம, இஹலகம பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த கொவிட் தொற்றாளர் கடந்த 14 ஆம் திகதி வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றிருந்த நிலையில், வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வீ்டொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டார்.

எனினும், அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றார்.

இதனையடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதலின்போது, அங்கிருந்து சுமார் 500 மீற்றர் தூரத்திலுள்ள வீடொன்றிலிருந்து மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »