கொட்டகலை சுகாதார பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ஃபாரஸ்ட்விக் தோட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் உட்பட 19 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் நோய்வாய்ப்பட்டு வீட்டிலேயே உயிரிழந்திருந்தார்.
இவருடைய உடலுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த நபரின் குடும்ப உறுப்பினர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கொட்டகலை பகுதியைச் சேர்ந்த மேலும் இருவர் கோவிட் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு டிக்கோயா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
