நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், தற்போது பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
