தனியார் மருந்தகங்களின் ஊழியர்களுக்காக கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் மருந்தகங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் என அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மருந்தகங்களில் பணிபுரிபவர்கள் அடிக்கடி கொரோனா நோயாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை சந்திக்க நேரிடுவதால் அவர்களுக்கு கட்டாயமாக தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அந்த சங்கத்தின் ஊடகச் செயலாளர் சிதத் சுரங்க தெரிவித்தார்.
பயணத்தடை காலப்பகுதியிலும் மருந்தகங்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு சேவையாற்றி வரும் மருந்தக ஊழியர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
