நேற்றைய தினம் எரிபொருள்களின் விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து அதற்கு பொருப்பான அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலக வேண்டும் என ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
எரிப்பொருள் விலையேற்றத்திற்கான பொறுப்பை விடயத்திற்கான அமைச்சர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர் சாகர காரியவசத்தின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிப்பொருள் விலையேற்றத்திற்கான பொறுப்பை அமைச்சர் உதய கம்மன்பில ஏற்றுக்கொண்டு, அவர் அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு எதிர்நோக்கியுள்ள இவ்வாறான சூழ்நிலையில், அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தின் பிரதானிகளை நிர்க்கதி நிலைக்கு உட்படுத்தும் நோக்குடன் அமைச்சர் உதய கம்மன்பில செயற்பட்டாரா என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

